Sunday 1 November 2015

உயிர் கொல்லும் பூச்சிகொல்லிஉணவைசிதைக்கும் நெகிழி

உயிர் கொல்லும் பூச்சிகொல்லிஉணவைசிதைக்கும் நெகிழி
    இந்தபூமிநமதுகரங்களில் ஒருநீலமுத்தெனவழங்கப்பட்டிருக்கிறது,காற்றும் வெப்பமும்,நீருமாகவியாபித்திருக்கும் இப்பூமிநம் சந்ததிக்கானவாழ்வுப்பிரதேசம்.  இன்றுநாம் எவ்வாறானசூழ்நிலையில் வாழ்ந்துகொண்டிருக்கிறோம்? நம் சுற்றுப்புறமும்,பயன்படுத்தும் பொருட்களும் பாதுகாப்பானதாகஉள்ளதா,நாம் வாழும் இப்புவியைஎவ்வளவுஅனுசரணையுடன் அணுகுகிறோம் என்பதுநம் முன்பேஉள்ளகேள்வி.
பிளாஸ்டிக்கும் பூச்சிகொல்லியும்:
    மண்ணிலும்,நீரிலும்,காற்றிலும் நீலம் பாய்ச்சிஅழகுபார்க்கிறோம். பவானியும்,நொய்யலும,; பாலாறும்,வைகையும் தொழிற்சாலைக் கழிவுகளால் அழிந்துபோயிருக்கின்றன.  நாம் வினையாற்றியசெயல்கள் இன்றுநம்மையேகொல்லும் பொருளாகநெகிழியும்,பூச்சி;கொல்லியும் விஸ்வரூபம் எடுத்துள்ளன.
    நெகிழிஎனும் பிளாஸ்டிக்கின் பயன்பாடு இன்றுஅனைத்திலும் நிறைந்துபெருகிஉள்ளது.  பிளாஸ்டிக் பைகளைஅதிகஅளவில் பயன்படுத்தும் நமதுசெயல்,நிலத்தினைநஞ்சாக்கி,நிலத்தடிநீரைஅழிக்கிறது,பல்வேறுவடிவங்களில்,நாம் உணவுப்பொருளைஅடைத்துவைக்க,பிளாஸ்டிக் டப்பாக்களையேபயன்படுத்துகிறோம். இன்றையவாழ்வுமுறையில் நாம் அனைவருமேமதியஉணவினை இத்தகைய ஸ்டைலானடப்பாக்களையேஉபயோகிக்கிறோம் மிகச்சூடாகஉணவுப் பதார்த்தங்களைஅதில் அடைத்துபிளாஸ்டிக்கின் சுவையோடுநம்மைஅறியாமலேஉண்ணப் பழகியிருக்கிறோம்.
உயிர் கொலலும் பிளாஸ்டிக்:
    நீர் முதற்கொண்டுஅனைத்துஉணவுப் பொருட்களையும் பிளாஸ்டிக் கவர் மற்றும்பாட்டில்களில் அடைத்துவைக்கிறோம் இப்புவியையும் உபயோகமற்றதாக்கி,நம் உடலையும் மெல்லக் கொல்லும் விஷமாகஉருவெடுத்துள்ளதுபிளாஸ்டிக்,
    உபயோகித்து தூக்கிஎறியவும் என்பதாகக் கூறிவிற்பனைசெய்யப்படும் தண்ணீர் மற்றும் குளிர்பானபாட்டில்களை,கிராமப்புறமக்களேபெரும்பான்மையாக,மீளப்பயன்படுத்துகின்றனர்.
    உபயோகிப்பதற்கேலாயக்கற்றபிளாஸ்டிக்கில் உணவினையும்,நீரினையும் அடைத்து,மீண்டும் மீண்டும் பயன்படுத்துவதால் பிளாஸ்டிக்கில் உள்ளவேதியியல் நச்சுசிறிதுசிறிதாகநம் உடலைச்சிதைக்கத் துவங்குகிறது. இன்றுபெரும்பான்மையானமக்கள் (நாளொன்றுக்கு இந்தியாவில் மட்டும் சுமார் 1800 பேர்) புற்றுநோய்க்குஉள்ளாகபிளாஸ்டிக்கும் பூச்சிமருந்தும்முக்கியகாரணம் என்பதுமறுக்க இயலாததுஆகும்.
வாழ்வைச்சிதைக்கும் பூச்சிகொல்லி:
    நமது இயல்பானவாழ்க்கையில் மிகவும் பிரயத்தனப்பட்டுமாற்றங்களைஏற்படுத்துகிறோம்.  புதியகண்டுபிடிப்புகளின் வாயிலாகப்பலபொருட்களைஅறிகிறோம் அவற்றுக்குஆட்பட்டுவாழ்வைநகர்த்துகிறோம் அவற்றுள் ஒன்றென,நம் உணவையேநமக்குஎதிரானதாகமாற்றிக்கொண்டிருக்கிறதுபூச்சிகொல்லிமருந்து.
    கேரட்,முள்ளங்கி,முட்டைகோஸ்,உருளைக்கிழங்குஎனச் சகலகாய்கறிகளிளும்,திராட்சைஉள்ளிட்டபழங்களிலும்பூச்சிமருந்துகளைஅதிகமாகஉபயோகப்படுத்துகிறோம்.  முழுமையானசத்துக்களைத்தரவேண்டியகாய்கறிகளும்,பழங்களும் சக்கையாகக் காணப்படுகின்றன.
    நஞ்சைக் கலந்து, புழு பூச்சிகளைஒழித்து,பூச்சியற்றுநாம் உருவாக்கியபளபளப்பானகாய்கறிகள் மெல்ல,நம் உயிர் குடித்துக் கொண்டிருக்கிறது,என்பதுஅதிர்ச்சியாகவிருக்கலாம்,உடல் ஆரோக்கியத்தைபெற்றுத் தரும் என்றுநம்பிஉண்ணும் உணவுப் பொருட்கள் கொடியஉடல் தீங்குகளைஏற்படுத்தியபடி இருக்கின்றன.
    மேலும்,காடுகளை,நிலத்தினை,நீரினை,நம்மிடம் ஒப்படைந்த இந்த இயற்கையை,அதன் இளமையைநம் சுய நலத்திற்காகக் கொன்றுகொண்டிருக்கிறோம்.  அதன் வழியாகநம் இனத்திற்கானமுடிவுரையைஎழுதிக்கொண்டிருக்கிறோம்
விளைவுகள்:
    வளரும் நாடுகளில்,பூச்சிகொல்லிகள் காரணமாக 30 இலட்சம் மக்கள் பாதிக்கப்படுகின்றனர் எனஉலகசுகாதாரநிறுவனம் கணக்கிட்டுள்ளது. மேலும் இதனால் 2,20000 பேர் உயிரிழக்கும் அபாயத்தைஎட்டியுள்ளனர் எனவும் குறிப்பிடுகிறது.
    பூச்சிகொல்லிகள் குழந்தைகளிடம் மிகக்கடுமையானவிளைவுகளைஏற்படுத்துகிறது. குறைபாட்டுடன் குழந்தைப்பிறப்பு,உடல் வளர்ச்சிகுன்றுதல், மூளை,தண்டுவடபாதிப்புகளைகுழந்தைகளிடம் ஏற்படுத்துகிறது. ஞாபகசக்திகுறைவுபடுதல்,நரம்புமண்டலப்பாதிப்புகள்,உடல் ஓருங்கமைப்புக்குறைபாடு,மந்தமானசெயல்பாடுபோன்றவையும் ஏற்படக்காரணமாகிறது.
    களைக் கொல்லிகாற்றிலும் நீரிலும் மிகஎளிதாகப்பரவுகிறது. விவசாயிகள் பூச்சிகொல்லிகளைதாவரங்கள் வளரஉதவும் பொருளாகக்காண்கின்றனர். பூச்சிகொல்லிகளைப்பயன்படுத்தும் வழிமுறைகள் தெரியாதவிவசாயிகளேஅதிகம்
தேவை,மாற்றுவழிகள்:
    பூச்சிகொல்லிகளைப் பயன்படுத்துகையில்,சரியானபாதுகாப்புக்கவசங்களையும்,முகமூடிகளையும் பயன்படுத்தவேண்டும். தோல் மற்றும் நாசியின் வழியாகஉடலில் ஊடுருவும் விஷம் கொஞ்சம் கொஞ்சமாகஉயிர் கொல்லும். புற்றுநோய்,கல்லீரல் நோய்கள், இனப்பெருக்கக் குறைபாடுமற்றும் நாளமில்லாச் சுரப்பிகளில் தேவையற்றவிளைவுகளைத் தோற்றுவிக்கிறது.
நம் நாட்டில் 145 வகையானபூச்சிமருந்துகள் மட்டுமேஅங்கீகாரத்தைப் பெற்றுள்ளன. 85,000 மெட்ரிக் டன்கள் அளவுபூச்சிகொல்லிகள் ஓர்ஆண்டில் தயாரிக்கப்படுகின்றன.
    1958 இல் கேரளாவில் கோதுமைமாவில் கலந்திருந்தபூச்சிகொல்லிமருந்தால் 100 க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்பலவேறுமாநிலங்களிலும் இதன் பாதிப்புகள் தொடர்ந்தபடி இருக்கிறது. இவ்வாறான சூழ்நிலையிலும், இதன் உபயோகத்தைக் குறைக்கவோ,மாற்றுவழிகள் மூலம் விவசாயத்தைப்பெருக்கவோநாம் ஏன் தயங்கிநிற்கிறோம் என்பதுஅபாயநிலையினைச் சுட்டுகிறது. இந்தியாவில் 51மூஉணவுபண்டங்கள் பூச்சிகொல்லியின் எச்சங்களைஉள்ளடக்கியேதயாராகிறது.
    உலகஅளவில் தயாரிக்கப்படும் உணவுப் பொருட்களில் 20மூஅனுமதிக்கப்பட்டஅளவைவிடஅதிகபூச்சிமருந்துஅளவினைஉள்ளடக்கியதாகஉள்ளது.
    இனிவரும் காலங்களிலாவது,பூச்சிகொல்லிபாதுகாப்புமுறைகள் குறித்தும்,பூச்சிமருந்துகளைஅதன் எணணிக்கையில் முறைப்படுத்துதல், இயற்கையானமுறையில் அமைந்தமருந்தினைத் தயாரித்தல்; ,நிலத்தையும்,நீரையும் கேடாக்காமல் உரங்களையும்,களைக் கொல்லிகளையும் தயாரிக்கவேண்டும் என்பதே இயற்கையினை, இப்பூமியைநம்  எதிர்காலசந்ததியைவாழவைக்கும்.
விவசாயிகளே,
    விவசாயிகளே இயற்கையானசெயல்முறையில் அமைந்தபூச்சிகொல்லிகளைக் கண்டுபிடியுங்கள்பூச்சிமருந்துகளையும் பயன்படுத்தும் பாதுகாப்புமுறைகளையும் அறிந்துஉபயோகியுங்கள்.இனியாவதுபசுவின் கோமியம்,வேப்பஎண்ணெய் போன்றவற்றிலிருந்துபெறப்படும் மருந்துகளைஉபயோகிக்கவும்,தயாரிப்புகளைஊக்குவிக்கவும் செய்வோம்.
    இயற்கையானமண்புழுஉரத் தயாரிப்பைபரவலாக்குதல்,பிளாஸ்டிக்கின் பயன்பாட்டைகுறைத்து,புதியகேடற்றபொருளைஅதற்குமாற்றாகக் கண்டுபிடித்தல்,தன்மைக்கேற்ப, இயற்கைமருந்துஆராயச்;சிகளைமுன்னெடுத்துச் செல்வதும் மிகுந்தஅவசியமாகிறது.
    இயற்கை ஆர்வலர்களும்அனைத்துமக்களும்,விவசாயிகளும்,தன்னார்வலர்களும் இத்தகையபணிகளைமுனைப்புடன் செயல்படுத்தமுயன்றால் மட்டுமேசிறிதளவாவது,நம்மையும்,நம்மிடமிருந்து இப்புவியையும் காக்க இயலும்.
கவிஞர் அ. ரோஸ்லின் ஆசிரியை,
    அரசுமேல்நிலைப் பள்ளி,
    தா.வாடிப்படடி
அ. ரோசலின்:  kaviroselina997@gmail.com

No comments:

Post a Comment