நனையும் பூகோளம்
------------------------------ ------------
கிட்ட வந்து ஒட்டி விளையாடிய கவின் பயலை
விரட்டியபடி இருந்தேன்,,
என்னை எப்பம்மா தொடவிடுவிங்க,
நாம எப்பம்மா சேர்ந்து தூங்கலாம்,,
எனக்கேட்டவாறு சிணுங்கினான்,,
கொடியதொரு அவஸ்தையைத் தரக்கூடிய இக்காய்ச்சல்
அவனுக்கும் தொற்றக்கூடாது எனும் விழிப்பில் கடந்தன நாட்கள்,
துயில் கொள்ளும் தருணங்களில்,
கட்டிலின் ஓரம் நிற்பதும்,
நெடு நேரம் உலாவுவதுமாக இருந்தான்,
போய்த் தூங்குப்பா என்றதும்,,
பதிலேதும் அளிக்காமல் கவிழ்ந்த மலரென விலகிச்சென்றான்,,
டம்ளரில் கனன்ற சுடுநீர் சில்லிட்டுக் கிடந்தது,
கண்களை மூடித் துயில்பவனைத் தள்ளி நின்று
கண்ணுற்றுத் திரும்புகையில்,,
தூங்கலையாம்மா எனும் ஈர மொழி உதிர்த்து,
கசங்கிய விழிகள் மிதக்கப் பகிர்கிறான் கவின்.
இரவின் நிசப்தம் கலைக்கும் அவனது சொற் துளியில்,,
வெளியில் ந்னைந்து கொண்டிருந்தது பூகோளம்,,
------------------------------

No comments:
Post a Comment