Sunday 1 November 2015

கறிவேப்பிலையா? அ. ரோசலின்

கறிவேப்பிலையா?

நாம் ஆரோக்கியமாக இருக்கவே விரும்புகிறோம். அதற்கென பல்வேறு உணவுப்பழக்கங்களையும், உடற்ப்பயிற்சிகளையும் மேற்கொள்கிறோம். ஒரு பெரிய நிறுவனத்தின் பெயர் பொறிக்கப்பட்ட இணை உணவினையோ, அல்லது உடலுக்கு போஷாக்கு மற்றும் சக்தி அழிக்கக்கூடிய விளை உயர்ந்த உணவுப்பொருட்களையோ அன்றாடம் பயன்படுத்துகிறோம்

    ஆப்பில், ஆரஞ்சு போன்ற கண்களுக்கு இதமான பழங்களில் மட்டுமே சத்துக்கள் நிறைந்துள்ளன எனக்கருதி அவற்றை உண்ண ஆவல் கொள்கிறோம் நாம் தினந்தோரும் நம் உணவில் காணும் பொருள் கரிவேப்பிலை நாம் பயன்படுத்தும் கறிவேப்பிலையில் எத்தனை வித உயிர்ச் சத்துக்கள் அடங்கியிருக்கின்றன என உங்களுக்கு தெரியுமா? எத்தனை பேர் கரிவேப்பிலையைத் தட்டின் ஓரம் எடுத்துவைக்காமல் உண்டிருப்போம். பழந்தமிழ்ச் சித்தர்கள் கரிவேப்பிலையின் மகத்துவம் உணர்ந்து, அதனை தங்கள் மருத்துவத்தில் பயன்படுத்தி உள்ளனர். உச்சந்தலை முதல் உள்ளங்காள்வரை சகலத்துக்கும் நன்மை பயக்கும் கரிவேப்பிலை நமக்கு கிட்டிய வரப்பிரசாதம்

கறிவேப்பிலை வரலாறு:

    பாரசீகத்திலிருந்து வந்த ஆறியர்களின் வருகைக்குப் பின், தென்னிந்தியாவில் திராவடர்களுக்கு,  கறிவேப்பிலை அறிமுகமானது என வரலாற்றிலிருந்து அறிகிறோம். உலகெங்கும் பரவலாக வலரும் தாவரமாக உள்ள கறிவேப்பிலையின் அறிவியல் பெயர் முராயாகோனிகி என்பதாகும் உரசசலடநயஎநள என ஆங்கிலத்தில் வழங்கப்படும் இப்பெயர், ஆங்கிலேயர் இந்தியாவை ஆண்டபோது வழக்கில் வந்ததாகும்

சத்துக்கள்:

இந்திய நறுமணப் பொருள் கழகத்தின் தகவல்படி, 100 கிராம் கறிவேப்பிலை, சராசரியாக, 6 கிராம் புரதம், 1 கிராம் கொழுப்பு, 4 கிராம் தாதுக்கள், 7 கிராம் நார்ச்சத்து, 19 கிராம் கார்போஹைட்ரேட், 830 மில்லி கிராம் கால்சியம், 57 மில்லி கிராம் பாஸ்பரஸ், 0.930 மில்லி கிராம் இரும்புச்சத்தும் கொண்டது என குறிப்பிட்டுள்ளது

மேலும் பீட்டா கரோட்டின், தயாமின், ரைபோபிளேவின், நயாசின், போலிக் அமிலம், விட்டமின் யுஇடீஇஊஇ மற்றும் நு, மாங்கனீசு, குரோமியம் போன்ற தாதுச்சத்துக்களும், கறிவேப்பிலையில் அடக்கம்
பயன்
    காலையில் வெறும் வயிற்றில் சிறிதளவு கறிவேப்பிலையைப் பச்சையாக உண்ணும் போது, அதனால் கிடைக்கக்கூடிய பயன்கள் அளப்பரியவை.

    பலதரப்பட்ட ஆன்டி ஆக்ஸிடண்ட் மூலக்கூறுககைக் கொண்ட கறிவேப்பிலை வயிற்றுப்போக்கு, வாயுக்கோளாறு, செரிமானமின்மை, வயிற்றுப்புண் எணும் அல்சர், இன்சுலின் குறைபாடு, கெட்ட கொழுப்புகளைக் கரைத்து சமநிலையில் பராமறித்தல் மற்றும் உடலில் தோன்றும் கட்டிகள், மற்றும் புற்றுநோய்க்கு எதிராகச் செயல்படும் ஆற்றலும் இந்த அற்புத மூலிகைக்கு உண்டு என்பது ஜப்பானியர்களின் ஆய்வில் வழியே கண்டுணரப்பட்டுள்ளது.

இயற்கை மருத்துவமும், கறிவேப்பிலையும்:

    நம் தமிழ் இயற்கை மருத்துவத்தில், மனித உள் உறுப்புகளைப் பாதுகாக்கும் மகத்தான பணியினைக் கறிவேப்பிலை செய்கிறது என்பதனை சித்தர்களின் குறிப்புகளிலிருந்து அறிகிறோம்.

சிறிது கறிவேப்பிலைச்சாறுடன், எலுமிச்சை பழச்சாறு மற்றும் வெள்ளம் சேர்த்துக் காலை நேரத்தில் பருகுவது, நம் மனதையும், உடலையும் சுறுசுறுப்பாகவும், புததுணர்வாகவும் வைக்கும் என்பதை இயற்கை மருத்துவம் குறிப்பிடுகிறது காடுகளில் வாழ்ந்த நம் தமிழ் யோகிகள் இவ்வாறான மூலிகைகள் பற்றிய உண்மைகளை அறிந்து போற்றினர். அவற்றைக் குறிப்புகளாகவும் எழுதி வைத்திருந்தனர். காலப் போக்கில் இவற்றையெல்லாம் நாம் மறந்திருக்கிறோம் என்பதும், போற்றிக் கொண்டாட வேண்டிய இயற்கை மருத்துவத்தை கேப்சூல்களாக மாற்றி, வெளிநாட்டுக் கம்பெனிகள் கொள்ளை இலாபம் ஈட்டுவதும் கண்கூடு.

பாதுகாக்கும் அரண்

    14 விதமான நம் உடல் குறைபாடுகளிலிருந்து கறிவேப்பிலை நம்மைக் காக்கிறது.

1.    புற்றுநோய் வரவிடாமல் தடுக்கக் கூடிய நோய் எதிர்ப்பாற்றலை நமக்குத் தருகிறது.
2.    புற்றுநோய் சிகிச்சை முறையான கீமோதெரபியின் விளைவுகளைக் கட்டுப்படுத்துகிறது.
3.    வயிற்றுப்போக்கு, சிறுநீரகப் பிரச்சனை போன்ற வயிற்று உபாதைகளிலிந்து விடுவிக்கிறது.
4.    கல்லீரலில் சேகரமாகும் நச்சுக்களை அழித்து அதனை ஆரோக்கியத்துடன் பராமரிக்கிறது.
5.    உடலில் உள்ள குளுகோசின் அளவைக் கட்டுப்படுத்தி, இரத்த சர்க்கரையின் அளவைக் குறைக்கிறது.
6.    உடலில் உள்ள தீமை பயக்கும் கொளுப்பினைக் கரைக்கிறது.
7.    அதிக உடல் பருமனைக் குறைக்கவும், வயிற்றுப்பகுதி சதையினைக் குறைக்கவும் உதவுகிறது.
8.    உடலின் வெப்ப நிலையினைப் பராமறிக்கிறது.
9.    விட்மின்கள் யுஇடீஇஊஇநுஇ பீட்டா கரோட்டின் நிறைந்து இருப்பதால் கண்கள், கேசம்,   தோல் பகுதிகளுக்கு நிறைந்த பலனையும், பலவித தோல் ஒவ்வாமையிலிருந்தும் நம்மைக் காக்கிறது.
10.    பலவிதத்தாதுச் சத்துக்கள் நிரைந்த கறிவேப்பிலை இரத்த சோகையை விரட்டும் தன்மை கொண்டது.
11.    பெண்களுக்குத் தேவையான கால்சியம் செறிந்த பொருளாக கறிவேப்பிலை உள்ளது. தினந்தோறும் சிறிது கறிவேப்பிலையை உணவுடன் சேர்த்துக் கொள்ளுகையில், கால்சியம் குறைபாட்டினால் வரக் கூடிய பிரச்சனைகள் அண்டாது.
12.    ஆண்டி ஆக்ஸிடண்கள் நிறைந்து உள்ளதால் உடலைப் புத்துணர்வோடு வைக்கிறது.
13.    கறிவேப்பிலையிலிருந்து கிடைக்கும் எண்ணெய் ஆயுர்வேத மருத்துவத்தில் சிறப்பான இடத்தினைப் பெற்றுள்ளது.
14.    கறிவேப்பிலையின் கனி, இலை, வேர்பட்டை ஆகிய அனைத்தும் உயிர் சத்துக்கள் நிறைந்து காணப்படுகிறது. மூல நோய்க்கான மருத்துவத்தில் இதன் கனி முக்கியப் பங்காற்றுகிறது.
15.    இரத்தப்புற்று, புரோஸ்டேட் புற்றுநோய்க்கு எதிராகச் செயல்பட்டு வராது காக்கும் ஆற்றல் கொண்டது என கொள்கத்தா மற்றும் வாஷிங்டன் உயிர்வேதியியல் மற்றும் மருத்துவப் பல்கலைகள் ஆராய்ச்சிகள் வழியே அறிகிறோம்
கறிவேப்பிலையின் பயன்களைப் பட்டியலிட இயலாத வண்ணம் மீப்பெரும் மூலிகையாக நமக்கு அளிக்கப்பட்டுள்ளது.
தமிழ் மருத்துவத்தில் சிறப்பான இடம் பெற்ற கறிவேப்பிலையை நாம் அன்றாட உணவில் சேர்த்துக் கொள்ளவேண்டும்
கறிவேப்பிலை தூக்கி எறிந்து விடும் பொருளல்ல. அது நம் உடலைக் காக்கும் அரண் இலை வடிவினில் உடல் நலம் பேணும் இனிய அறம்.

No comments:

Post a Comment