Sunday, 1 November 2015
அ. ரோஸ்லின் கவிதைகள் — ஒரு பார்வை ஸ்ரீரங்கம் சௌரிராஜன்
அ. ரோஸ்லின் கவிதைகள் — ஒரு பார்வை
ஸ்ரீரங்கம் சௌரிராஜன்
தமிழில் முதுகலை முடித்து மதுரை மாவட்டத்தில் ஒரு பள்ளியில் ஆசிரியையாகப் பணியாற்றி வருகிறார் அ. ரோஸ்லின். ‘ அழுகிய
முதல் துளி ‘ பெண் எனும் மழை ‘ , ‘ மஞ்சள் முத்தம் ‘ என மூன்று கவிதைத் தொகுப்புகளைத் தந்துள்ளார். செறிவான நடை கொண்ட
கவி மொழிக்குச் சொந்தக்காரர். புதிய புதிய சொற்சேர்க்கையால் சுய நடை இவர் கவிதைகளில் முன்நிற்கும் நல்லியல்பாக உள்ளது.
புத்தகத்தின் தலைப்புக் கவிதை ‘ மஞ்சள் முத்தம் ‘ ! அழகாகத் தொடங்கி அழகாக முடியும் எளிய , காதல் படிமத் தொடர் கவிதையிது !
மஞ்சள் கொன்றை
மலர்களால் நிரம்பியிருக்கிறது
சாலை
அங்கு நீ தந்த
ஒரு முத்தத்தில்
ஒரு மஞ்சள் பூவென
சுருங்கிவிட்டது பூமி
…… என்று கவிதை தொடங்குகிறது. ‘ பூமி சுருங்கிவிட்டது ‘ என்ற வெளிப்பாடு கவித்துவம் மிக்கது.
என் பிரியத்தின் குகைக்குள்
ஒரு பறவையெனப் பற்றியிருக்க
விரும்புவதாகக் கூறினாய்
…… முதல் வரியில் புதிய உவமை நயமானது.
இக் கணத்தில் நான்
ஸ்பரிசித்திருந்தேன்
உன் சிறகின் சிலாகிப்பை
…….. ‘ சிறகின் சிலாகிப்பு ‘ என்ற சொற்கள் நம் முன் பரப்பும் அர்த்த வெளியில் தொனிப்பொருள் செறிவு , மொழி சார்ந்த அழகை வாசகன்
மனத்தில் விட்டுச் செல்கின்றன.
சிறிதும் மறுக்கவியலா
உன் பேரன்பு
என்னுள் பரவசத்தைத் தெளித்தபடி
கடந்து செல்கிறது
இனியெப்போதும்
திரும்பப் போவதில்லை நான்
என் கைவிடப்பட்ட கூட்டிற்கு
……. முத்தாய்ப்பு பொருத்தமாக உள்ளது. கடைசி வரியில் சொல்லாமல் சொல்லப்பட்ட பறவைப் பிம்பம் தன் இயல்பேயான பறத்தலைக்
காதல் சிலிர்ப்பாக மாற்றிக் குறியீடாக நிற்கிறது. ‘ பரவசத்தைத் தெளித்தல் ‘ என்பது வாசகனைப் பரவசப்படுத்தவே செய்கிறது.
‘ நனையும் பூகோளம் ‘ ஒரு வித்தியாசமான கருப்பொருள் கொண்டது. தாய்க்குத் தொற்றுக் காய்ச்சல். குழந்தை கவின் அம்மாவோடு
விளையாட அருகில் வருகிறான். தாய் தடுக்கிறாள். கவின் வருத்தத்துடன் தூங்கப்போய்விடுகிறான்.
கிட்ட வந்து ஒட்டி விளையாடிய கவின் பயலை
விரட்டியபடி இருந்தேன்
…….. என்று கவிதை தொடங்குகிறது. குழந்தையைத் தூங்கப் போகச் சொல்கிறாள் அம்மா. அவன் போகிறான். எப்படி ?
பதிலேதும் அளிக்காமல் கவிழ்ந்த மலரென விலகிச் சென்றான்
……. என்கிறார் ரோஸ்லின். குழந்தையின் பாசச் சொற்களை ‘ ஈர மொழி ‘ என்கிறார்.
இரவின் நிசப்தம் கலைக்கும் அவனது சொற்துளியில்
வெளியில் நனைந்து கொண்டிருக்கிறது பூகோளம்
…….. என்று கவிதை முடிகிறது. சாதாரணமான ஒரு நடைமுறைச் சம்பவம் எளிய சொல்லாட்சியில் கவிதையாக உருவெடுத்துள்ளது.
‘ பரிச்சயமான வெளி ‘ என்ற கவிதை , கவிதைத் தாக்கம் பற்றிப் பேசுகிறது. பாலை அடிப்பிடிக்கச் செய்ய , காலம் பிறழ்ந்து தூங்க ,
சுற்றம் மறந்து கதைக்க , அலுவல்களைத் தள்ளிப் போட , கேசம் நரைப்பதை பூதாகரப்படுத்த , திட்டமிட்ட விளம்பரத்தை எதிர் பார்க்க ,
உரையாடல்களைத் திறக்க என ஒரு பட்டியல் காணப்படுகிறது.
கவிதையின் கடைசி வரி……
கவிதை
எவருமற்ற தனிமைக்குள் தள்ளிச் செல்கிறது.
……. தணியாத கவிதையார்வம் நமக்குள் ஓர் உலகத்தை உருவாக்கத்தான் செய்கிறது. அந்த உலகத்தின் ஒற்றைப் பிரஜையாகக் கவிஞன்
சர்வ சுதந்திரத்துடன் பயணிக்கிறான்.
‘ ஆயுதம் சூடிய சொல் ‘ என்ற கவிதை , ஒரு காதல் சிறுகதையின் சாரத்தைத் தரித்து நிற்கிறது. இக்கவிதை இரண்டு இடங்களில்
தொனிப் பொருள் கொண்டது.
முக மூடியணிந்து
வேடிக்கை காணத் துவங்கின
நான் பகிர்ந்த சொற்கள்
…….. அந்த முகமூடி நீங்கினால் என்ன நிகழும் எனக்கேட்டால் , அதற்குப் பதில் சொல்கிறது முத்தாய்ப்பு !
ஆயுதம் தரித்து வீழ்ந்த
சொல் ஒன்று
உயரே உயரே எழுகிறது
மாமிச வாசத்தோடு
…….. இந்த முத்தாய்ப்பின் தொனிப் பொருளை விளக்கினால் சிறப்பாகாது. தொனிப் பொருள் குறிக்கும் யூகம் நல்ல கவித்துவம் கொண்டது.
கவிதையில் ஒரு சொல்லை மீண்டும் மீண்டும் பயன்படுத்திக் கட்டமைத்தல் ஒரு உத்தியாகும். மனுஷ்யபுத்திரன் கவிதைகளில்
இப்பாணியைக் காணலாம். அதே உத்தியில் அமைந்துள்ளது ‘ எச்சம் ‘ கவிதை ! ‘ அன்பு ‘ என்ற சொல் பத்திகள் தோறும் விரவிக் கிடக்கிறது.
‘ நீ எனும் நீரூற்று ‘ — காதல் கவிதை ! படிமத்தில் தொடங்கிப் படிமத்தில் முடிகிறது.
உன் சொல்லின் ஆழத்தில்
புதைகிறேன்
என் மௌனம் கலைத்தபடி
காதலின் பல வாயில்களைக் காட்டுகிறது. கவிதை !
நெருங்கிய உறவின் சிலிர்ப்பை
உனக்குள் கண்டெடுக்கிறேன்
நானுமொரு கடலாகி
கடல் என்ற படிமம் மன நெகிழ்வை — சாதகமான ஒரு வெளியை உருவாக்குகிறது.
என் கண்களின்
அடர் வனத்தில்
உன் பார்வையின் நீரூற்றைக்
காண்கிறேன்
‘ நீரூற்று ‘ மன நிறைவிற்குக் குறியீடாக அமைந்துள்ளது. மனச் சுவர்களெங்கும் இனிமை பூசப்படுகிறது.
சில நினைவுகளின்
நெருக்கடியில்
இரவை
விரும்பாமலே
விடுவித்து விடுகின்றன
பகல் பொழுதுகள்
……. சிறிய , எளிய , இனிய கவிதையிது !
‘ நதியில் மூழ்கும் சமுத்திரம் ‘ கவிதை கூட காதலைத்தான் பேசுகிறது.
நீர் மூழ்கிக் கப்பல் விட்டுச் சென்ற
தடயங்களுடன் கிடக்கிறது
என் சமுத்திரம்
‘ நதி ‘ ஆணுக்கும் , ‘ சமுத்திரம் ‘ பெண்ணுக்கும் குறியீடுகளாக அமைந்துள்ளன. இவர் கவிதைகளில் படிமத்திற்குப் பஞ்சமில்லை !
‘ கயிற்றிலிருந்து விழுந்தவன் ‘ என்ற கவிதையில் சில இடங்கள் புரிகின்றன ; சில புரியவில்லை ! தொன்மத்தைப் பின்புலமாகக்
கொண்ட புனைவுக் கவிதையிது !
பிரபஞ்ச உருண்டைக்குள்
சிக்கிக் கிடக்கிறாள் மீனாட்சி
புவி நடுங்கத்துவங்குகிறது
வெளிவரத் துடிக்கும்
அவள் முயற்சிகளில்
ஆதி வனப்பின்
ஜீவன் மீட்கும் வாசம்
மயான வெளி மீறித் தெறிக்கிறது
……. மேற்கண்ட பத்திக்கு எனக்குப் பொருள் விளங்கவில்லை.
கிளியைக் காணாது பதறும் மீனாட்சி
மெய் திமிற இரைந்து துடிக்கையில்
உள் புகைச்சல் புகைச்சல் மறைந்த
முறுவலிப்பில் விஷத்தை
அமிழ்தமெனக் குடித்து
வீழ்ந்து கிடந்தான் சொக்கன்
……. சொக்கனும் மீனாட்சியும் இறை நிலையிலிருந்து மனித நிலைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர். கிளி வேதத்தின் வடிவம் என்பது இந்திய
ஆன்மிகம் சார்ந்த பார்வையாகும். இக்கவிதையின் உள்நோக்கம் தெரியவில்லை.
புவியை மெல்ல
விழுங்குகிறாள் மீனாட்சி
…….. என்பது முத்தாய்ப்பு. மிகையுணர்வு சார்ந்த புனைவு ! இக்கவிதக்கு ‘ கயிற்றிலிருந்து விழுந்தவன் ‘ என்ற தலைப்பு எப்படிப்
பொருந்துகிறது என்பது கேள்வியாக நிற்கிறது.
‘ உன்னிலிருந்து விடுபடாத சூடு ‘ என்ற கவிதையில் அசாதாரணமான படிமம் ஒன்று அமைந்துள்ளது.
உன் கரத்தின்
இளம் சூட்டைப்
பதற்றத்துடன் உணர்கையில்
எனது அறையின் கதவுகள்
இறக்கைகளாக
உருமாறத் துவங்குகின்றன
உவமைத் தாக்கம் அதிகம் கொண்ட ரோஸ்லின் மொழிநடையில் , ‘ சந்திப்பின் வெப்பம் ‘ என்ற கவிதையிலிருந்து ஒரு படிமம் :
தினமும்
ஒரு பூ உதிர்வது போல
ஒவ்வொரு பொழுதும் உதிர்கிறது
நிறைவாக , ‘ மஞ்சள் முத்தம் ‘ தொகுப்பில் பல நல்ல கவிதைகள் உள்ளன. அழகிய தமிழ் மொழியின் பரப்பில் இவர் இன்னும்
நமக்குத் தர பல கவிதைகளை இனம் காண்பார் என்ற நம்பிக்கை எனக்குண்டு
நன்ற்: www.thinnai.com
அமைதி என்னும் கலங்கரைவிளக்கம்
அமைதி என்னும் கலங்கரைவிளக்கம்
(செப்டம்பர் 21 உலக அமைதி தினத்திற்காக எழுதப்பட்ட கட்டுரை)
அமைதி என்பது எதுவாக இருக்கிறது. எங்கு இருக்கிறது எனயோசித்துத் தயங்குகையில் கண்ணில் மின்னி மறையும் ஜிவனுள்ள ஓர் ஒளியாக இவ்வுலகில், அமைதி வியாபித்திருக்கிறது.
இந்த உலகம் தன் அமைதியை இலைகளாக உதிர்க்கத் துவங்கியிருக்கிறது. அமைதிக்கான தளிரைக் காத்து, நம் சந்ததியினர்க்கு அளிப்பது நம் தலையாய பணியாகும்.
அமைதி என்பது பகைமையை வேரறுத்தல் எனவும், நாம் வாழும் சூழலில் ஆரோக்கியமான நடத்தை மாற்றங்களை உறவுகளை வலுப்படுத்தும் திறன்மிக்கதாகவும் உள்ளது.
அமைதிக்கான இடம்:
அமைதியும் அதற்கான இடமும் இன்று நாம் வாழும் உலகில் மிகத்தேவை. நாம் சார்ந்திருக்கும், நம்மைச் சுற்றியிருக்கும் நாடுகள் தங்களுக்குள்ளும் பிற நாடுகளுடனும் போரில் ஈடுபடுகின்றன.
இவ்வுலகம் அமைதியிழந்து தவிப்பதற்குப் பல்வேறு காரணங்கள் பொறுப்பேற்கின்றன. ஒவ்வொரு வளர்ந்த நாடும் இவ்வுலகை வழிநடத்த அதன் முன்னேற்றத்தில் பங்கு கொள்ள முயலுவதில்லை. சுயம் சார்ந்த வெளிப்பாடுகள் நிறைந்த உலகினைக் கட்டமைக்கவே அவை விரும்புகின்றன.
அமைதி என்பது முக்கியமான ஒன்றென இன்று ஆகி வந்திருக்கின்றது. நமக்குப்போர்களற்ற உலகும் நம் தலைமுறையின் ஆகச்சிறந்த நிலமும் நமது தேவை. இவ்வுலகின் களிப்பினை, பெரு மகிழ்வைக் கொண்டாட அமைதியே வாயில்.
உலக அமைதி தின வரலாறு:
உலக அமைதி நாள் ஐக்கிய நாடுகளின் பொதுச்சபை பிரகடனத்தின் படி அனைத்து உறுப்பு நாடுகளிலும் செப்டம்பர் 21ஆம் நாள் கொண்டாடப்பட்டு வருகிறது. இத்தினமானது 1981இல் இருந்து நினைவு கூரப்பட்டு வந்தாலும் 2002ஆம் ஆண்டில் இருந்து செப்டம்பர் 21இல் கொண்டாடப்படுவது சிறப்பு.
மக்கள் ஒன்றிணைந்து ஓர் சமூகமாகத் தன்மானத்தோடும் உரிமைகளோடும் வாழும் தேவையைப் பிரதிபலிப்பதாக அமைதி தினம் அமைகிறது. கலாச்சார வேறுபாட்டிற்குள்ளும் சிறுபான்மையினருக்கும், பண்பாட்டைப் பாதுகாக்கவும், மத ரீதியான அழுத்தத்திலிருந்து விடுபடவும், அனைவருக்குமான புரிந்துணர்வு முக்கியமானதாகிறது. யுத்தம,; வன்முறைக்கு இணங்காத கருத்தாக்கமாக அமைதி அமைவதும், பகைமையற்ற சூழலின் வெளிப்பாடாகவும் உலகளாவிய சிந்தனையில் போர்களற்ற தன்மையாகவும் காணப்படுகிறது.
காந்தியடிகள் அமைதி குறித்த முக்கியமான உள்ளீட்டைப் பெற்றிருந்தார். சமூகநீதி காணாது போகும் போது அங்கு அமைதி இருப்பதாகக் கருத முடியாது. நீதி என்பது அமைதிக்கு அடிப்படையானது, என காந்தி கருதினார். அமைதி என்பது வன்முறையற்ற தன்மை மட்டுமல்ல நீதியின் இருப்பும் நீங்காதத் தன்மையுடன் ஒளிர வேண்டும் என்பது இதனால் புலனாகிறது.
போரும் அமைதியும்:
உலகின் அனைத்து முன்னேற்றத்திற்கும் அடிப்படையானது சமாதானமாகும். உலகில் நடைபெற்ற இரு பெரும்யுத்தங்கள் பழி வாங்குதலின் சாட்சியாய் இன்னும் கனன்று எரியும் நெருப்பைத் தன்னகத்தே வைத்து உறங்குகிறது.
உலக வரலாற்றில் நடைபெற்ற போர்களில், இரண்டாவது உலகப்போர் முக்கியமானது. காரணம,; உலகமே இரு அணிகளாக பிரிந்து, உலகின் பல பகுதிகளில் தங்களுக்குள் சண்டையிட்டன. கணக்கிட இயலாத உயிர்ச்சேதம் ஏற்பட்ட இப்போரினால், காணாமல் போனவர்களும,; அகதிகளானவர்களும், நோய்க்கு உள்ளானவர்னளும் மிக அதிகமாய் இருந்தார்கள். உலகிலேயே மனிதகுலம் இதுவரை சந்தித்த மீப்பெரும் அழிவுக்கு இரண்டாம் உலகப்போர் காரணமாகியது.
ஆக்கத்திற்குப் பயன்படவேண்டிய தொழில்துறை, பொருளாதாரம,; அறிவியல் கண்டுபிடிப்புகள் அனைத்தையும் அழிவுக்குப்பயன்படுத்தி, உலக அமைதியை சுருக்கிட்டு மேலேற்றிய செயல்கள் நடைபெற்றது வரலாற்றின் பக்கங்களில் குருதி வழிய எழுதப்பட்டிருக்கிறது.
இரண்டு பிராந்தியங்களுக்கு இடையிலான வெற்றி, தோல்வியை ஏற்றுக் கொள்ள இயலாத மனப்பக்குவமற்ற தன்மையே பெரும் போரினை வரவழைத்திருக்கிறது என்பது வலிக்கும் உண்மை, பிறரின் சமாதான இருப்பைக்குலைக்கும் சிந்தை, தான், தோல்வியினைச் சந்திக்கும் போதும், நிராகரிக்கப்படும் போதும் ஏற்படுகிறது என்பது போர்கள் நமக்குக் காட்டும் வெளிச்சம்.
தீர்வும் தேவையும்:
இரண்டாம் உலகப்போரின் பின்பு உலக அமைதி வேண்டி 1945 இல் நிறுவப்பட்ட ஐக்கிய நாடுகள் அமைப்பு, உலக நாடுகளிடையே ஏற்படும் பிரச்சனைகள், போர்களைத் தடுக்க நடவடிக்கை மேற்கொள்கிறது என்றாலும், இஸ்ரேல், பாலஸ்தீனம் சிரியா, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் போன்ற நாடுகளில் அமைதிக் குலைவு ஏற்படுத்தும் துப்பாக்கிகளுக்கும் தீவிரவாதத்திற்கும் முற்றுப்புள்ளி வைக்க முடியவில்லை.
அடிப்படை சுதந்திரத்தையும், நாடுகளுக்கு இடையேயான நல் உறவினை மேம்படுத்தவும், பாதுகாக்கவும்,மக்களாட்சியின் வழியே சமாதானத்தை மேம்படுத்துவது ஒன்றையொன்று வலுப்படுத்தும்.
நமது மனதின் அடியாழத்தில் உள்ள அன்பை வெளிப்படுத்துவதோடு மனித சமத்துவத்தையும், தன்மானத்தையும் கொணர்வதே இத்தினத்தின் நோக்கமாகும்.
ஒவ்வொரு மனிதனுக்கும் அமைதிக்கான உரிமை உள்ளது. உலகத்தைக் கிழித்துக் கொண்டிருக்கும் வன்முறைக்கான தீர்வின் தேடலே அமைதி தினம்.
சமாதானத்தைத்தக்க வைத்தல் அரிதான தொரு சூழலில், ஈராக், சிரியா போன்ற நாடுகளில் நடைபெறும் வன்முறை மக்கள் மீதான அடிப்படை வாதத்தை நிரூபணம் ஆக்கிய வண்ணம் உள்ளது. போர் நடைபெறும் நாடுகளின் மீதான வன்முறை, மனிதநேயம் மற்றும் சமயம் சார்ந்த மதிப்பீடுகளைத் தூக்கி எறிகிறது.
அமைதியைத்தக்க வைக்க வேண்டுமானால், கல்வி நிலையங்களின் வழியாக ஊடுருவும் கசப்பின் விதைகளை அகற்றினால் மட்டுமே சாத்தியமாகும். வளரும் இளம் சமுதாயத்தின் கண்களுக்கு மறைவாயுள்ள ஒளியை வெளிக்கொணர்தல் அவசியம். மனிதனது மனதின் அடுக்குகளுக்குள் ஒளிந்திருக்கும் வன்மத்திற்கு எதிரான தடுப்பினை அமைதி கொண்டே கட்டமைக்க வேண்டியது காலத்தின் தேவையாய் உள்ளது
நவீன போர் முறைகளின் வளர்ச்சிக்கு எதிராக அமைதியைக் கொண்டு செல்வதும். அதன் மூலம் மனித குலத்தினை அழிவிலிருந்து மீட்டெடுக்கவும் ஏற்ற உபாயம் அமைதியின்றி வேறாக இருக்க இயலாது.
மனித உரிமையும் மக்களாட்சியின் மீதான மதிப்பும் ஏற்பட அமைதியை நோக்கிய நமது கல்விப் பயணம் முன்வைக்கும் கருத்து இதுவே. இளம் வயதில் வெறுப்பினை வளர்க்கும் சாதி, மதம் சார்ந்த விழுமியங்களை அகற்ற சிறப்பான சம வாய்ப்புள்ள கல்வி வாய்ப்புகளை ஏற்படுத்த வேண்டும்.
இன்றைய தகவல் தொழில் நுட்ப வளர்ச்சியில் அதி முன்னேற்றம் அடைந்துள்ளோம். எனினும் போரினால் பலியாகும் எண்ணற்ற உயிர்களின் வாழ்வைக் காப்பதற்கான வழிகளைத் திறக்கும் திறவுகோல் எதுவாக இருக்கிறது.
உலகெங்கும் போரின் துயரங்கள் படிந்திருக்கும் வீடுகள், உடல் உறுப்புகளை இழந்தோர். உறவுகளை இழந்தோர் என இழப்பின் பரிபூரண வேதனை தரும் தீவிரவாதத்தின் நீட்சிக்கு முடிவு எதுவாக இருக்க முடியும்.
அய்லானும் அமைதியும்:
சிரியா நாட்டில் இருந்து கிரேக்க நாட்டிற்கு அகதியாகச் சென்ற சிறுவன் அய்லான், கடலில் மூழ்கி பலியாகி கடற்கரையில் உயிரற்று ஒரு பொம்மையைப் போலக்கிடந்தான்.
லிபியா,சிரியா உள்ளிட்ட நாடுகளின் உள்நாட்டுப் போர் காரணமாக வெளியேறும் பல்லாயிரக் கணக்கான மக்கள் தங்கள் உயிரைப் பணயம் வைத்து, ஒரு அமைதியான வாழ்வைத் தேடி வேறு நாடுகளுக்கு அகதியாகப் பயணமாகின்றனர்.
மத்திய தரைக் கடல் நாட்டிலிருந்து ஐரோப்பிய நாட்டிற்கு, உயிரைப் பணயம் வைத்து ஆபத்தான பயணம் மேற்கொண்ட அய்லானின் குடும்பத்திற்கு இனி அமைதியின் விளக்கு ஒருபோதும் எரியப்போவதில்லை.
மன அமைதியின் கலங்கரை விளக்கம்:
போர் உண்டாக்கும் சிக்கல்கள் தவிரவும், சக மனிதர்களோடு மன ஒருமையுடன் வாழ அடிப்படையான புரிந்துணர்வும், சகித்தலும் தேவையாகிறது. மன அமைதிக்குத்தடை உண்டாகும் தருணங்களில், உறவு, தொழில் போன்றவற்றில் பொருத்தப்பாடற்ற சூழல் ஏற்படுகிறது. அமைதியான வாழ்வென்பது தனக்கும், தன்னை சார்ந்தோருக்கும் விலை மதிக்க இயலாத காலத்தைப் பரிசளிக்கும் என்பதே, உலக அமைதி தினத்தின் கலங்கரை விளக்கிலிருந்து கசியும் ஒளி.
அ. ரோஸ்லின், ஆசிரியை,
அரசு மேல்நிலைப்பள்ளி,
தா. வாடிப்பட்டி.
பெண்மையைப் போற்றுவோம்
ஆகஸ்ட் - 26
மகளிர் சமத்துவதினத்தையொட்டி எழுதப்பட்ட கட்டுரை
பெண்மையைப் போற்றுவோம்
பெண்:-
பெண் என்பவள் தன்னை உருக்கி,சிறுமைப்படுத்தி, வலி ஏற்று, முற்றுமாய் தன் சார்ந்த குடும்பத்தினை வளப்படுத்தத் தன்னுள் பெரும் தேய்தலை ஏற்றவளாகவே காணப்படுகிறாள். தன் சுக சந்தோஷங்களை அடக்கி, தன்னைச் சுற்றி இருப்போர் வாழ்ந்திருக்கவே விரும்புகிறாள்.
வாழ்வின் வசந்தம் பெண், கடலின் உப்பெனவும், காற்றின் இசையெனவும் ஆனவள். குடும்பம் தழைக்க அன்பின் உரமிடுபவள் பெண்.
பெண்ணின் நிலை:-
பெண்ணைத் தலையாய்க் கொண்ட நம் பண்பாடும், வழிபாடும் பெண்ணை எவ்வாறான நிலையினில் வைத்துள்ளன.
நமது இறையியல்துவம் எவ்வாறு கட்டமைக்கப்பட்டுள்ளது! சிவபெருமான் தனது இடப்பாகத்தில் உமையாளை சரிக்குச்சரியாக ஏற்றுள்ளார், செந்திருவைத் தன் நெஞ்சில் வைத்தவராகத் திருமாலும், கலைமகளைத் தன் நாவில் கொண்டோனாகப் பிரமனும் காணப்படுகின்றனர்.
ஆண்டாள், காரைக்கால் அம்மையார் திலகவதியார், திருமங்கையாழ்வார் ஆண்டவனைக் கொண்டாடித் தொண்டு செய்திருந்து மகிழ்ந்தது போலவே இன்றும் தன்னை ஆண்டானுக்கும் சாhந்திருக்கும் குடும்பத்தார்க்கும் சேவை செய்வதாக, சீரான கருத்தால் சிநேகத்தின் செருக்கால் சிறந்தோங்குபவளாகப் பெண் இருக்கிறாள்.
உரிமைக்கான தேவை:
ஒவ்வொரு துறைகளிலும் பெண்ணின் முன்னேற்றம், தொடுவானின் செந்தணலென மின்னும் போது, பெண்ணின் சமத்துவம் போற்றுவது அவசியமாகிறது. பெண்கள்மீதான வன்முறை நிகழ்வுகளை நிமிடக்கணக்கிலும், நொடிக்கணக்கிலும் புள்ளிவிவரங்கள் பட்டியலிடுகின்றன. உலகில் சரிபாதியாகப் பரவியிருக்கும் பெண்குலம் தனக்கான உரிமையை முன் வலியுறுத்தக் காரணம் என்ன, ஆழியாகப் பரந்தும், நீராவியாகச் சுருங்கியும்,பனியாக உருகியும் வார்க்கப்படும் பெண்ணை இயல்பு நிலையினின்று விலக்கி வைத்து, இழிவு பாராட்டும் போதே உரிமைக்கான அவசியம் ஏற்படுகிறது.
போற்றுதலுக்கு உரியவள் பெண்,இந்த உலகிற்கான வாரிசுகளைப் படைப்பது முதல், உடல் ரீதியாகவும், சமுக பொருளாதார ரீரியாகவும்,மன அளவிலும் ஆணினின்று பெண் வேறுபட்டே காணப்படுகிறாள் சிந்தித்துச் செயலாற்றுதல், சகித்துப்பணியாற்றுதல், ஒருமுகப்படுத்தும் திறன் போன்றவற்றில் பெண்ணுக்குச் சிறப்பான இடமுண்டு. ஆண்மையப் பார்வையிலிருந்து விலகி, தனக்கான உலகைச் சுயபார்வையோடு அணுகும் பெண்கள், தங்களுக்கான சமத்துவத்தைப் புதிய தேடல்களோடு அமைத்துக் கொள்கிறார்கள்.
வரலாற்றில், தனக்கெதிரான ஒரு சூழலில் தன்னை முன்னெடுத்துச் செல்வது, விடுதலையின் செயற்களமாகிறது, தாவரம் செழிக்க உதவும் நீரெனப் பாய்ந்து, வளமாக்கும் முடிவுகளால், சமத்துவத்தின் கரைதனில் பிரவேசிக்க இயன்றிருக்கிறது.
பெண்ணின் முகங்கள்:
ஜான்சி ராணியிலிருந்து, இரோம் சர்மிளா வரையிலான பெண்களின் உரிமை மீட்கும் போர்கள் பெண்ணின் சமத்துவத்தைப் பகரும் சான்றுகளாக நம்முன் விரிந்து கிடக்கின்றன.
சந்தா கோச்சர் ஐஊஐஊஐ வங்கியின் முதன்மை நிர்வாக அதிகாரி ஆவார். ஆசிய பசிபிக் பிராந்தியத்தின் 25 ஆற்றல் மிக்க பெண்களில் ஒருவராகத் தேர்வானவர் 2010 இல் தனது வங்கி குறித்த சேவைகளுக்காக பத்ம பூஷண் விருதுபெற்ற சாதனையாளர்
சாந்தி டிகா 35 வயதே நிரம்பிய இளம் தாய், இந்திய இராணுவத்தில் ஜவானாகப் பணி புரிந்தவர் இந்தியத் தாய்த்திரு நாட்டிற்காகத் தன் உயிரினையும் துறந்தவர்.
காய்கறி விற்பனையாளரின் மகளாகப் பிறந்த ஆஷாராய், ஓட்டப் பந்தய வீராங்கனையாக தேசிய அளவில் சாதனை படைத்த பெருமைக்கு உரியவர்.
விண்வெளிக்குப் பயணித்து உயிரீந்த இந்தியப்பெண் கல்பனா சாவ்லா, ளுடீஐ யின் அதிகாரியாகப் பொறுப்பேற்ற அருந்ததி போன்றோர் பெண்ணின் சமத்துவத்தை நினைவூட்டித் தங்களுக்கான உழைப்பின் துளிகளை இந்திய நதியோட்டத்தில் கலந்த பெருமைக்கு உரியோராவர்.
துர்கா சக்தி, ஒன்றை மனுஷியாக உத்தரப்பிரதேச அரசை, லஞ்ச ஒழிப்;பிற்கான நடவடிக்கையில் எதிர் கொண்டவர். லஞ்சத்திற்கு எதிராகப்போராடிய இவருக்கு உத்தரப்பிரதேச அரசு பணி இடைநீக்கத்தை பரிசாகத் தந்தது பொதுமக்களும், ஊடகங்களும் இவருக்கு ஆதரவாகத் துணை நின்றன அனைத்துப் புறச்சூழ்நிலையின் தாக்கங்களின் பொருட்டு தனது வாழ்க்கையின் பிரதியினை, அதன் நோக்கத்தினை மாற்ற முயலவில்லை துர்கா சக்தி.
2014 இன் சாதனைப் பெண்ணாக வணிகத்தில் சாதித்து வரும் பெப்சிகோ நிறுவனத்தின் முதன்மை அதிகாரி இந்திரா நூயி, குடும்பப் பொறுப்புகளோடு, சமூகத்தின் வணிக ஓட்டத்திலும் தன்னை ஈடுபடுத்தி வெற்றி கண்டவர்.
இலட்சியம்:-
தங்களது இலட்சியத்தில் சற்றும் தொய்வோ, சலிப்போ இன்றிச்செயல்படும் பெண்கள், முன்னேற்றத்துடிப்புடன் இயங்கும் பெண்கள், தேவையற்றுத்தடைகளை, சர்ச்சைகளை ஏற்க வேண்டியது, அவள் பெண் என்பதாலா எனச் சிந்திக்க வைக்கிறது, சமீபமாக நடந்த விம்பிள்டன் கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் போட்டியில் வெற்றி பெற்று உலகச்சாதனை நிகழ்த்திய சானியா, இரட்டையருக்கான பிரிவில் முதல்நிலை வீராங்கணையாக உருவாகியிருக்கிறார். தன் சொந்த விருப்புகள், வீரர்கள் தெரிவு, உடை சார்ந்த எதிர்ப்புகள் துரத்தியபோதும், தன் நோக்கத்தை விடாமல் தொடர்ந்து டென்னிஸில் புதிய உச்சம் தொட்டிருக்கும் சானியா மிர்சா, முக்கியமான புரிதலைத் தன் வெற்றியின் வழியே முன் வைக்கிறார்.
மணமான பெண்களின் உழைப்பைக்குறித்த மனோபாவம் எல்லா இடங்களிலும் ஒன்று போலவே உள்ளது. பெரும்பான்மையாக திருமணமான பெண்களை பணிக்கு வைத்துகொள்வது தவிர்க்கப்பட்டே வருகிறது.
பெண்கள் பல்துறை சார்ந்தும், சமூக அக்கறையோடும் செயல்பட்டுக் கொண்டே இருக்கின்றனர். சமத்துவம் பேசும் இக்காலகட்டத்தில்; தான் தாய்ப்பால் புகட்டுவது குறித்த பேச்சுக்களையே ஐ.நா அறிவிக்கிறது என்பது எதைச்சுட்டுகிறது.
பெண்ணும் குடும்பமும்:-
பெண் குடும்பம், சமூகம், பணி என்று இயங்கினாலும், அவள் தன் மீதான வன்முறையை எதிர் கொண்டபடியிருக்கிறாள் என்பதும் ஏற்க வேண்டிய உண்மை. பெண்ணுரிமை என்பதே ஆணுக்கு எதிரானது என்ற கருத்தாக்கம் உடைபடுகையில், மனித உரிமைக்கான புதிய பார்வையை பெண்ணுக்கான புதிய கோணம் பிரதிபலிக்கும்.
ஒவ்வொரு கொண்டாட்டமான சூழலும், அதற்கு எதிரான ஒடுக்கப்படும் குரலும் இயல்பானதென்றாலும், ஒடுக்கப்படும் பிரதியைக் குறைத்து மதிப்பிட இயலாது, அதற்கான புதிய திறப்புகளை ஏற்படுத்தி சமத்துவத்தை பிரகாசிப்பிக்க வேண்டியது இன்றைய தேவை.
பல்துறையில் பெண்கள் தங்கள் சாதனையை நிகழ்த்திக் காட்டிய வண்ணம் உள்ளனர். வீட்டில் இருந்தபடியேயும் அவர்களுக்கான உலகைப் படைத்தும், அதன் வழியாக தங்கள் குழந்தைகளின் எதிர்காலத்தைக் கட்டமைக்கும் ஒவ்வொரு தாயும் பெண் சமத்துவத்தின் ஓட்டத்தில் தங்களை இணைக்கத்துடிக்கும் பெரு நதிகளே. ஒட்டத்தைச் சீர்படுத்தும் நாளில் பிரவாகித்து ஓடும் சமத்துவ நதி.
கல்வி, வேலைவாய்ப்பு, பொருளாதார சுதந்திரம், போன்றவற்றோடு, இயைந்து, குடும்ப வன்முறை, பாலியல் ரீதியான ஒடுக்குதல்களிலிருந்தும் பெண்ணைக் காக்க வேண்டியது இன்றைய சூழலின் தேவையாகும்.
அ. ரோஸ்லின்
ஆசிரியை, அரசு மேல்நிலைப்பள்ளி,
தா. வாடிப்பட்டி

உலர்ந்திடா மழை
உலர்ந்திடா மழை
_______________________
_______________________
இரு வேறு மனோநிலையுடன்
மழையில் பயணப்பட்டிருக்கிறோம்,
மழையில் பயணப்பட்டிருக்கிறோம்,
வாத்தியக்காரனின்
தாள லயத்துடன்
கடந்து வந்த தடங்களை
பின்னோக்கி நனைக்கிறது மழை.
தாள லயத்துடன்
கடந்து வந்த தடங்களை
பின்னோக்கி நனைக்கிறது மழை.
சேகரமாகும் உன் நினைவின் துளிகள்
பேராழியின் அனுபவத்தை
என்னுள் கசியச்செய்கிறது..
பேராழியின் அனுபவத்தை
என்னுள் கசியச்செய்கிறது..
நீ வெளியேறிச் செல்கிறாய்,
நதியென,
அதன் நனைவித்தல் என,
அதன் மொழியென,
அதன் இரட்சிப்பென,.
அதன் நனைவித்தல் என,
அதன் மொழியென,
அதன் இரட்சிப்பென,.
தங்கள் பிரியத்தின் ஒலிகளால்
உன்னதத்தை நிரப்பும்
சிறு பறவையின் குரல்கள்,
இன்னமும் உலர்ந்துபோகாத
பசிய தானியத்தின் ஈரத்துடன்
உன் மழையினைத் தருவிக்கின்றன..
______________________________ _____________________________
உன்னதத்தை நிரப்பும்
சிறு பறவையின் குரல்கள்,
இன்னமும் உலர்ந்துபோகாத
பசிய தானியத்தின் ஈரத்துடன்
உன் மழையினைத் தருவிக்கின்றன..
______________________________
2) மிதக்கும் பெருநகரம்
______________________________
______________________________
தனிமையும் நெருக்கமுமாய்
வசீகரித்துக் கடக்கிறது
பெரு நகரொன்றின் பொழுது,
வசீகரித்துக் கடக்கிறது
பெரு நகரொன்றின் பொழுது,
விளக்குகளின் ஊடே
இந்நகரத்தின் ஒப்பனையோடு
இயைந்தமையாது நகருகிறார்கள்,
யுவன் யுவதிகள்.
இந்நகரத்தின் ஒப்பனையோடு
இயைந்தமையாது நகருகிறார்கள்,
யுவன் யுவதிகள்.
அடுக்ககக் கடைகளிலிருந்து வழியும்
நிறமற்ற தங்கள் கனவுகளுக்கு
மிதக்கும் பொருளொன்றின்
பெயரிடுதலோடு கழிகிறது
நகரின் ஞாயிற்றுத் தடங்கள்,,
நிறமற்ற தங்கள் கனவுகளுக்கு
மிதக்கும் பொருளொன்றின்
பெயரிடுதலோடு கழிகிறது
நகரின் ஞாயிற்றுத் தடங்கள்,,
ஒளி சொரியும் நிலத்தினின்று
விடுபட்டு
இயங்கும் நகரம்,
இருளின் ஒப்பற்ற வண்ணத்தை
பெரு விருப்போடு பூசிக்களிக்கிறது,
விடுபட்டு
இயங்கும் நகரம்,
இருளின் ஒப்பற்ற வண்ணத்தை
பெரு விருப்போடு பூசிக்களிக்கிறது,
எக்கணமும்
விரைந்த யாத்திரைக்கு
ஒப்புவிக்கப்பட்ட
நகரின் நீர்த்தாரைகள்,
ஆகாயத்தாமரைகளால் மூடப்பட்டவை,..
______________________
விரைந்த யாத்திரைக்கு
ஒப்புவிக்கப்பட்ட
நகரின் நீர்த்தாரைகள்,
ஆகாயத்தாமரைகளால் மூடப்பட்டவை,..
______________________
உயிர் கொல்லும் பூச்சிகொல்லிஉணவைசிதைக்கும் நெகிழி
உயிர் கொல்லும் பூச்சிகொல்லிஉணவைசிதைக்கும் நெகிழி
இந்தபூமிநமதுகரங்களில் ஒருநீலமுத்தெனவழங்கப்பட்டிருக்கிறது,காற்றும் வெப்பமும்,நீருமாகவியாபித்திருக்கும் இப்பூமிநம் சந்ததிக்கானவாழ்வுப்பிரதேசம். இன்றுநாம் எவ்வாறானசூழ்நிலையில் வாழ்ந்துகொண்டிருக்கிறோம்? நம் சுற்றுப்புறமும்,பயன்படுத்தும் பொருட்களும் பாதுகாப்பானதாகஉள்ளதா,நாம் வாழும் இப்புவியைஎவ்வளவுஅனுசரணையுடன் அணுகுகிறோம் என்பதுநம் முன்பேஉள்ளகேள்வி.
பிளாஸ்டிக்கும் பூச்சிகொல்லியும்:
மண்ணிலும்,நீரிலும்,காற்றிலும் நீலம் பாய்ச்சிஅழகுபார்க்கிறோம். பவானியும்,நொய்யலும,; பாலாறும்,வைகையும் தொழிற்சாலைக் கழிவுகளால் அழிந்துபோயிருக்கின்றன. நாம் வினையாற்றியசெயல்கள் இன்றுநம்மையேகொல்லும் பொருளாகநெகிழியும்,பூச்சி;கொல்லியும் விஸ்வரூபம் எடுத்துள்ளன.
நெகிழிஎனும் பிளாஸ்டிக்கின் பயன்பாடு இன்றுஅனைத்திலும் நிறைந்துபெருகிஉள்ளது. பிளாஸ்டிக் பைகளைஅதிகஅளவில் பயன்படுத்தும் நமதுசெயல்,நிலத்தினைநஞ்சாக்கி,நிலத்தடிநீரைஅழிக்கிறது,பல்வேறுவடிவங்களில்,நாம் உணவுப்பொருளைஅடைத்துவைக்க,பிளாஸ்டிக் டப்பாக்களையேபயன்படுத்துகிறோம். இன்றையவாழ்வுமுறையில் நாம் அனைவருமேமதியஉணவினை இத்தகைய ஸ்டைலானடப்பாக்களையேஉபயோகிக்கிறோம் மிகச்சூடாகஉணவுப் பதார்த்தங்களைஅதில் அடைத்துபிளாஸ்டிக்கின் சுவையோடுநம்மைஅறியாமலேஉண்ணப் பழகியிருக்கிறோம்.
உயிர் கொலலும் பிளாஸ்டிக்:
நீர் முதற்கொண்டுஅனைத்துஉணவுப் பொருட்களையும் பிளாஸ்டிக் கவர் மற்றும்பாட்டில்களில் அடைத்துவைக்கிறோம் இப்புவியையும் உபயோகமற்றதாக்கி,நம் உடலையும் மெல்லக் கொல்லும் விஷமாகஉருவெடுத்துள்ளதுபிளாஸ்டிக்,
உபயோகித்து தூக்கிஎறியவும் என்பதாகக் கூறிவிற்பனைசெய்யப்படும் தண்ணீர் மற்றும் குளிர்பானபாட்டில்களை,கிராமப்புறமக்களேபெரும்பான்மையாக,மீளப்பயன்படுத்துகின்றனர்.
உபயோகிப்பதற்கேலாயக்கற்றபிளாஸ்டிக்கில் உணவினையும்,நீரினையும் அடைத்து,மீண்டும் மீண்டும் பயன்படுத்துவதால் பிளாஸ்டிக்கில் உள்ளவேதியியல் நச்சுசிறிதுசிறிதாகநம் உடலைச்சிதைக்கத் துவங்குகிறது. இன்றுபெரும்பான்மையானமக்கள் (நாளொன்றுக்கு இந்தியாவில் மட்டும் சுமார் 1800 பேர்) புற்றுநோய்க்குஉள்ளாகபிளாஸ்டிக்கும் பூச்சிமருந்தும்முக்கியகாரணம் என்பதுமறுக்க இயலாததுஆகும்.
வாழ்வைச்சிதைக்கும் பூச்சிகொல்லி:
நமது இயல்பானவாழ்க்கையில் மிகவும் பிரயத்தனப்பட்டுமாற்றங்களைஏற்படுத்துகிறோம். புதியகண்டுபிடிப்புகளின் வாயிலாகப்பலபொருட்களைஅறிகிறோம் அவற்றுக்குஆட்பட்டுவாழ்வைநகர்த்துகிறோம் அவற்றுள் ஒன்றென,நம் உணவையேநமக்குஎதிரானதாகமாற்றிக்கொண்டிருக்கிறதுபூச்சிகொல்லிமருந்து.
கேரட்,முள்ளங்கி,முட்டைகோஸ்,உருளைக்கிழங்குஎனச் சகலகாய்கறிகளிளும்,திராட்சைஉள்ளிட்டபழங்களிலும்பூச்சிமருந்துகளைஅதிகமாகஉபயோகப்படுத்துகிறோம். முழுமையானசத்துக்களைத்தரவேண்டியகாய்கறிகளும்,பழங்களும் சக்கையாகக் காணப்படுகின்றன.
நஞ்சைக் கலந்து, புழு பூச்சிகளைஒழித்து,பூச்சியற்றுநாம் உருவாக்கியபளபளப்பானகாய்கறிகள் மெல்ல,நம் உயிர் குடித்துக் கொண்டிருக்கிறது,என்பதுஅதிர்ச்சியாகவிருக்கலாம்,உடல் ஆரோக்கியத்தைபெற்றுத் தரும் என்றுநம்பிஉண்ணும் உணவுப் பொருட்கள் கொடியஉடல் தீங்குகளைஏற்படுத்தியபடி இருக்கின்றன.
மேலும்,காடுகளை,நிலத்தினை,நீரினை,நம்மிடம் ஒப்படைந்த இந்த இயற்கையை,அதன் இளமையைநம் சுய நலத்திற்காகக் கொன்றுகொண்டிருக்கிறோம். அதன் வழியாகநம் இனத்திற்கானமுடிவுரையைஎழுதிக்கொண்டிருக்கிறோம்
விளைவுகள்:
வளரும் நாடுகளில்,பூச்சிகொல்லிகள் காரணமாக 30 இலட்சம் மக்கள் பாதிக்கப்படுகின்றனர் எனஉலகசுகாதாரநிறுவனம் கணக்கிட்டுள்ளது. மேலும் இதனால் 2,20000 பேர் உயிரிழக்கும் அபாயத்தைஎட்டியுள்ளனர் எனவும் குறிப்பிடுகிறது.
பூச்சிகொல்லிகள் குழந்தைகளிடம் மிகக்கடுமையானவிளைவுகளைஏற்படுத்துகிறது. குறைபாட்டுடன் குழந்தைப்பிறப்பு,உடல் வளர்ச்சிகுன்றுதல், மூளை,தண்டுவடபாதிப்புகளைகுழந்தைகளிடம் ஏற்படுத்துகிறது. ஞாபகசக்திகுறைவுபடுதல்,நரம்புமண்டலப்பாதிப்புகள்,உடல் ஓருங்கமைப்புக்குறைபாடு,மந்தமானசெயல்பாடுபோன்றவையும் ஏற்படக்காரணமாகிறது.
களைக் கொல்லிகாற்றிலும் நீரிலும் மிகஎளிதாகப்பரவுகிறது. விவசாயிகள் பூச்சிகொல்லிகளைதாவரங்கள் வளரஉதவும் பொருளாகக்காண்கின்றனர். பூச்சிகொல்லிகளைப்பயன்படுத்தும் வழிமுறைகள் தெரியாதவிவசாயிகளேஅதிகம்
தேவை,மாற்றுவழிகள்:
பூச்சிகொல்லிகளைப் பயன்படுத்துகையில்,சரியானபாதுகாப்புக்கவசங்களையும்,முகமூடிகளையும் பயன்படுத்தவேண்டும். தோல் மற்றும் நாசியின் வழியாகஉடலில் ஊடுருவும் விஷம் கொஞ்சம் கொஞ்சமாகஉயிர் கொல்லும். புற்றுநோய்,கல்லீரல் நோய்கள், இனப்பெருக்கக் குறைபாடுமற்றும் நாளமில்லாச் சுரப்பிகளில் தேவையற்றவிளைவுகளைத் தோற்றுவிக்கிறது.
நம் நாட்டில் 145 வகையானபூச்சிமருந்துகள் மட்டுமேஅங்கீகாரத்தைப் பெற்றுள்ளன. 85,000 மெட்ரிக் டன்கள் அளவுபூச்சிகொல்லிகள் ஓர்ஆண்டில் தயாரிக்கப்படுகின்றன.
1958 இல் கேரளாவில் கோதுமைமாவில் கலந்திருந்தபூச்சிகொல்லிமருந்தால் 100 க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்பலவேறுமாநிலங்களிலும் இதன் பாதிப்புகள் தொடர்ந்தபடி இருக்கிறது. இவ்வாறான சூழ்நிலையிலும், இதன் உபயோகத்தைக் குறைக்கவோ,மாற்றுவழிகள் மூலம் விவசாயத்தைப்பெருக்கவோநாம் ஏன் தயங்கிநிற்கிறோம் என்பதுஅபாயநிலையினைச் சுட்டுகிறது. இந்தியாவில் 51மூஉணவுபண்டங்கள் பூச்சிகொல்லியின் எச்சங்களைஉள்ளடக்கியேதயாராகிறது.
உலகஅளவில் தயாரிக்கப்படும் உணவுப் பொருட்களில் 20மூஅனுமதிக்கப்பட்டஅளவைவிடஅதிகபூச்சிமருந்துஅளவினைஉள்ளடக்கியதாகஉள்ளது.
இனிவரும் காலங்களிலாவது,பூச்சிகொல்லிபாதுகாப்புமுறைகள் குறித்தும்,பூச்சிமருந்துகளைஅதன் எணணிக்கையில் முறைப்படுத்துதல், இயற்கையானமுறையில் அமைந்தமருந்தினைத் தயாரித்தல்; ,நிலத்தையும்,நீரையும் கேடாக்காமல் உரங்களையும்,களைக் கொல்லிகளையும் தயாரிக்கவேண்டும் என்பதே இயற்கையினை, இப்பூமியைநம் எதிர்காலசந்ததியைவாழவைக்கும்.
விவசாயிகளே,
விவசாயிகளே இயற்கையானசெயல்முறையில் அமைந்தபூச்சிகொல்லிகளைக் கண்டுபிடியுங்கள்பூச்சிமருந்துகளையும் பயன்படுத்தும் பாதுகாப்புமுறைகளையும் அறிந்துஉபயோகியுங்கள்.இனியாவதுபசுவின் கோமியம்,வேப்பஎண்ணெய் போன்றவற்றிலிருந்துபெறப்படும் மருந்துகளைஉபயோகிக்கவும்,தயாரிப்புகளைஊக்குவிக்கவும் செய்வோம்.
இயற்கையானமண்புழுஉரத் தயாரிப்பைபரவலாக்குதல்,பிளாஸ்டிக்கின் பயன்பாட்டைகுறைத்து,புதியகேடற்றபொருளைஅதற்குமாற்றாகக் கண்டுபிடித்தல்,தன்மைக்கேற்ப, இயற்கைமருந்துஆராயச்;சிகளைமுன்னெடுத்துச் செல்வதும் மிகுந்தஅவசியமாகிறது.
இயற்கை ஆர்வலர்களும்அனைத்துமக்களும்,விவசாயிகளும்,தன்னார்வலர்களும் இத்தகையபணிகளைமுனைப்புடன் செயல்படுத்தமுயன்றால் மட்டுமேசிறிதளவாவது,நம்மையும்,நம்மிடமிருந்து இப்புவியையும் காக்க இயலும்.
கவிஞர் அ. ரோஸ்லின் ஆசிரியை,
அரசுமேல்நிலைப் பள்ளி,
தா.வாடிப்படடி
அ. ரோசலின்: kaviroselina997@gmail.com

விடுமுறை நாள்களில் ....
nrk [hyp `hypNl];
ePNuhilapd;
Mty;:-
gs;spg; gUtk;
vd;gJ cw;rhfKk;> RthurpaKk; kpFe;j jsk;. mjd; xt;nthU fPw;Wk; Mh;g;ghpg;NghL
fle;J nry;Yk; ePNuhilapidg; Nghy> kyh;fspd; thridiag; Nghy Mtiyj; juf;$baJ.
gapyf; $ba mf;fhy fl;lk; nrOikg;gLj;Jk; fskhf fhzg;gLfpwJ.
mg;Nghnjy;yhk;
vq;fs; gs;sp tpLKiw ehl;fs;> fy;Y}j;J nry;tijNa Nehf;fkhff; nfhz;bUf;Fk;.
vq;fs; ChpypUe;J fhy; eilahfNt 2 fp.kPf;Fk; Nky; gadpg;Nghk;. topapy; gdq;fpoq;F> R+uk; gok;> Cj;J
kpl;lha; rhg;gpl;lgb fy;Y}j;ij vjph;nfhs;Nthk;.
fy;Y}j;J>
twz;l vq;fs; gFjpf;Ff;fpl;ba mkpo;jk;.
rpwpa RidapypUe;J ePh; ntspNawp mg;gFjpia rpw;Nwhilahf;fpapUf;Fk;.
,aw;ifapy; cUthd
mr;Rid vq;fs; tpLKiw jpdq;fisg; gRikaha; guhkhpj;J. ePhpy; Fjpj;J> vOe;J>
Xb> %r;rpwf;f kPd;fnsd epidj;J jiy gpul;ilfisg; gpbj;J rpwpa lg;ghf;fspy;
Nrfhpg;Nghk;.
nghpa
jiyAlDk;> nts;sj;js;spa fz;fSlDk; fhzg;gLk; jiy gpul;ilfisg; gpbj;j
fspg;gpy; Mh;g;ghpg;Gld; fle;J nry;Yk; Neuk;.
tpLKiwAk;>
tpisahl;Lk;:-
tpisahl;LfSk;>
FOthf ,ize;J nray;gLjYk; nfhz;lhl;l kd epiyapidj; jUfpwJ. ,e;jg; Gw cyfpidf; Fwpj;j Mokhd rpe;jidiag;
ngw mit thapy;fshf cs;sd.
ngUk; ghd;ikahd
tpLKiwfspy; khiy kq;fp> ,Us; G+Rk; jUzq;fs; nkhl;il khbfspy; fopAk;.
ghly;fSk;>
fijfSk; epuk;gp topAk; ,utpd; nghOJfspy; kdk; yapj;Jf;fplf;Fk;. tprpj;jpukhdfsj;jpid mz;zhe;J ghh;j;jgb Japy;
nfhz;l ehl;fs; mjpfkhapUe;jJ.
gq;fsh NkL nrd;W
nrhl;lhq;fy;> nehz;b tpisahba mDgtk; rhjhuzkhf ,g;NghJ Njhd;wtpy;iy>
jw;rpe;jidiaAk;> kjpg;gPLfisAk; ,izf;Fk; ghykhf mit nray;gl;ld.
nrhl;lhq;fy;iyj;
Jf;fpg;Nghl;L fy; fPNo tpohky; yhtfkhf gpbg;gJk;> xU fhy; nfhz;L
jhtpj;jhtpr;nrd;W tpisahba nehz;bAk; vj;jifanjhU gutrj;ijAk;> cw;rhfj;ijAk;
je;jpUf;fpd;wd> tpisahbf; fisj;j nghOJfspy;> Nrhsf;fjph;fs; ruruf;Fk;
tay;fspy;; gr;ir thrk; kpFk; fjph;fis ehq;fs; kpf Neh;j;jpahf mjd; Nrhsj;ij
kl;Lk; gwpj;J cz;Nlhk;>
fjph;fSf;Fs;spUe;J
tpUl;nld;W gwe;J nry;Yk; jtpl;Lf;FUtpfSk; rpl;Lf;FUtpfSK; mg;nghOij ,ay;gha;f;
fopf;f cjTk;.
gs;sp tpLKiwf;
fhyq;fs; fw;wypypUe;J tpLgl;Lr; rw;Nw Xa;e;jpUf;fTk; kfpo;e;jpUf;fTk; mtfhrk;
jUfpd;wd.
xU njhlh;r;rpahd
nray;ghl;bdpilNa jug;gLk; xa;T> mikjp Gjpa Ntfj;ijj;j jUtjhf tpLKiwf;
fhyq;fs; cs;sd.
md;gpd; Nghjid:-
md;W fhzg;gl;l
R+oy; md;ig Nghjpj;J> ,aw;ifapd;> cs;shh;e;j jpwd;fis xUKfg;gLj;Jk;
epWtdkhf mike;jpUe;jJ.
“,t;Tyifg;
Gj;Jzh;NthL itf;ff; $baj mwpT kl;LNk vd;fpwJ fPij”. ek;ikj; jw;rhh;G
cilath;fshfg; ,g;G+tyfpy; epWj;jpapUg;gJk; mJNt.
tpLKiwf;
fhyq;fspy;> fw;gjpy; ,Ue;J tpLgl;ljhf fUJfpNwhk;> MdhYk;> ek;ikr;
Rw;wpa Gwr;R+oy;fs;> kfj;jhd fy;tpia ekf;F Nghjpf;fpd;wd. mg;gbg;gl;l fzq;fshfNt vq;fsJ tpLKiwf;
fhyq;fs; tha;j;jpUe;jd.
gs;spapy; ngw;w
fw;wy;> ,t;Tyif Gjpa mZF KiwAld; nfhz;lhl tha;g;gspj;jJ.
rpf;fy;fSf;fhd
jPh;tpid cs;slf;fpajhfj; jh$h; mth;fshy; Rl;lg;gLk; fy;tp> ek;ikg;
Gjpg;gpj;jgbNa ,Uf;fpwJ.
tpLKiwiaf;
nfhz;lhL:-
tpLKiwf; fhyq;fis
kfpo;NthLk; fspg;NghLk; nfhz;lhLq;fs;. ek;ikr;Rw;wpf; fhzg;gLk; ,aw;ifapd;
kdpjdpd; GhpjypypUe;J Gjpanjhd;iw mwpe;J nfhs;Sq;fs;.
,ijNa> “tho;jiy
KOikahf;FtNj fy;tp” vd;fpwhh; n`h;gh;l; ];ngd;rh;.
,irapidg; Nghy
fle;J nry;Yk; ejpnaDk; tho;T kpf uk;kpakhdJ.
mjd; xt;nthU miwfspYk; xspe;J nfhz;bUf;Fk; Njd; Jspfs; Nghd;wNj
nja;tpfj;jd;ik nfhz;l fy;tp. mf;fy;tp
ek; Mdkhtpy; cs;sJ> ek; rpe;jidapy; cs;sJ> ek; khk;rj;jpy; cs;sJ.cs;sf;
fplf;ifapy; xsph;;e;J nfhz;bUf;Fk; fy;tp> cq;fs; mDgtq;fis tskhf;fl;Lk;> Gjpa rpe;jidia tsh;f;fl;Lk;.
ts;Sthpd;
thf;fpd; gb> flTs; vDk; J}a mwpQdJ jpUtbia tzq;fp fy;tpapd; topNa Gjpa
Mw;wiyAk;> ew;rpe;jidiaAk; tsh;j;njLg;Nghk;.
Subject: m. Nuh];ypd; - vd;ghh;it
கவிதைகள்
1. தந்திரமற்ற எனது அன்பை
இரவிற்கு பரிசளித்தேன்,
சிறகுகள் பூட்டிப்பறக்கிறது
இரவுப்பறவை.
2. உன்னை வசீகரப்படுத்தாத
வார்த்தைகளைத் தவிர்த்தே
கணங்களைக் கடக்கிறேன்,
வலியினை ஒளித்துப்
பரவியிருக்கும் நீர்ப்பரப்பென.
3. குழந்தைகளற்ற பிரதேசத்தின்
பொம்மைகள்
சதா நித்திரையில் கிடப்பதைப்போல
சம்பாஷணையற்ற மனதும்.
மைஃபேவரிட்
பள்ளிக்குக் கொடுத்துவிடும் காய்கறி எதையும்
சாப்பிடுவதில்லை கவின்;
வழமை போல் இன்றும் அப்படியே,
கேரட் ஏன் சாப்பிடல,
கசப்பா .இருந்துச்சா என
கடுமையுடன் கேட்டது தான்,
இருநாட்களாக ஒரு பகிர்தலுமின்றி
மூழ்கிய கல்லென உலாவினான் ;
தொடர்ந்த தினங்களில்,
உடைகளைத்துவைக்கையில்,
அவனது நைட் பேன்டிலிருந்து
தலை நீட்டுகிறது,
நான்காய் மடிக்கப்பட்ட காகிதம்;
மைஃபேவரிட் எனும் தலைப்பினில்.
மைஃபேவரிட் சப்ஜெக்ட் சயின்ஸ்,
மைஃபேவரிட் டீச்சர் சின்னா சார்,
மைஃபேவரிட் ஃபிரண்ட் ரவி,
மைஃபேவரிட் ஐஸ்கிரீம் ஸ்ட்ராபெர்ரி
மைஃபேவரிட் வெஜிடபிள் கேரட்
அ.ரோஸ்லின்
இந்தப் பருவத்தின் கடைசி நதி
பதற்றத்துடன்
தேர்வெழுதத் துவங்தும் சிறுமியின்
கூந்தல் மலர்,
மெல்லப் பழுப்பிற்கு மாறத்துவங்கியிருந்தது.
வினாக்களை,
நிலம் மேல் படர்ந்த நீரென
உட்கொண்டு,
தன் பள்ளி நாட்களின் ஓவியத்தை
முழுமைபடுத்த முயல்கிறாள்,
தன் நிலத்தின் மகரந்தத்தை
உயிர்ப்பின் பெரும் நேசத்தோடும்
பதில்களென பதினிடுகிறாள்,
ஓர் ஆகாயமென விரிந்து கிடக்கும்
வாழ்வின் பக்கங்கள் சிலவற்றை
எழுதி முடிக்கும் திண்மை
அவள் வெண்ணிறத் தாள்களை
பசுமையாக்குகிறது.
இது அவளுக்கு
இந்தப் பருவத்தின் கடைசி நதி.
அ.ரோஸ்லின்
கனவென வளரும் பிரிவு
இந்த நாளின் பதற்றம்
உன்னையும் என்னையும்
இந்த நாளிலிருந்து விலக்கியிருக்கிறது.
உன் அன்பின் தீப்பற்றலில்
கனவென
வளர்ந்து வருகிறது
பிரிவு.
உன் அன்பற்ற உலகை
எதிர்கொள்ள இயலாமல்,
கிள்ளையின் புலம்பலுதிர்த்து,
இரட்சிக்க ஒண்ணாத
பெருங்காட்டினுள் கிடக்கிறேன்;
பசிய இலைகளாக,
வாட்டம் மிகுந்த மலர்களாக,
உன் சிநேகம் உறிஞ்சிய நிலமாக,
மெல்லிய சிறகடிப்போடு
பறவைகள்,
தங்கள் இருப்பிடம் தேடி
வரத்துவங்குகின்றன.
அ.ரோஸ்லின்
மழைத்தீற்றல்
1. ஒவ்வொரு மழைப்பொழுதும்
புத்தம் புதியதாகவே இருக்கிறது,
தினம் பகிர்ந்தும் நீர்த்துப்போகாத
குழந்தையின் முத்தம் போல.
2. மழைபொழியும்
காலை நேர ஆகாயம்
ஒரு அன்பை நினைவூட்டுகிறது
குழந்தையெனக் கண்சிமிட்டும்
காலையில் சிவந்த வெளிச்சம்
உன் கரத்தினால் உண்டானது.
3. ஒவ்வொரு மழையும்
ஏதாவது ஒன்றைப்
பரிசளித்துச் செல்கிறது,
முதலில் கொஞ்சம் பிரியம்,
கொஞ்சம் பிரமிப்பினைப்பூசிச்செல்கிறது,
நம் வாசல்களில்,
இறுதியாய்த் தீட்டுகிறது
சிறிது பிரிவின் நிறத்தையும்

அகநாழிகை பதிப்பகத்திற்கு என் நன்றியை ....
மெல்லிய அதிர்வுகளுடன் கூடிய மன ஓரங்களில் ஒலிக்கும் பறவைக் கூட்டமெனச் சொற்கள் பறக்கும் வித்தை கண்டு, பிரம்மிப்புடனேயே களிப்புற்றுக் கடக்கிறேன்.
எங்கனம் என் சொல்லின் வேர்களை நிலத்தில் பதிய வைத்தேன்,அதன் ஈரம் மிகு மலர்களையோ,பசிய தளிரையோ காண்கையில் தோன்றும் ஏக்கமும், நிச்சயமுமற்ற என் வெளி, எனக்கான ஒரு சுடரைக் காண்கையில்,நெடிய கதவுகள் பூட்டிய புள்ளியிலிருந்து சுதந்திர விருப்பின் வழியாகப் பரவுகிறது.
எப்போதும் அன்பு காட்டப்படாத அல்லது அன்பை வேண்டாத தருணங்களாகப் பொழுதுகள் கழிகையில், எங்கிருந்தோ எனை, எனக்கே அடையாளப்படுத்தும் காத்திரமான பிரியத்தை,எவரும் என்னிடம் பகிர்ந்திடாத அதன் பிரதியை எழுதியிருக்கிறேன்..இன்று நான் அதன் புறத்தே நின்று தன்னிலையின் துன்பம் மற்றும் வலியிலிருந்து, அவ்வார்த்தைகளை என் கரங்களில் எடுத்துப்பார்த்துப் பரிதபிக்கிறேன், என்னில் ஒட்டவே ஒட்டாத அச்சிநேகத்தை..
முதல் தொகுப்பு வெளிவந்த காலத்தில்,அடுத்தொரு கவிதைத் தொகுப்பு எழுதுவேன் என்று ஒரு போதும் எண்ணியதில்லை.வலுவந்தமாக வார்த்தைகளை உற்பவித்து முன்னிறுத்தும் தன்மையும் ஏற்றதில்லை.
எனக்கான சிலிர்ப்புடன் பரவி இருக்கும் பிரதிமையினை, எனது நுண் தன்மைக்கு ஒத்த மகிழ்வின் திருப்தியை,சிறிது பிணைப்புடன் கட்டமைக்க முயல்கிறேன்.
எனது தொன்மம் குறித்தும் பெண் கடவுட்களின் இருண்மை தாங்கிய அகம் குறித்தும்,அதன் போலியான திரைகளை விலக்கும் அதிகாரமற்று ஓரு சாமான்யப்பட்ட பரிச்சயத்தை பிரதிநிதிப்படுத்த முயற்சிக்கிறேன். எனது தனிப்பட்ட எதிர்பார்ப்புகள்,என் சீவியத்தில் நன் முழுக்கச் சார்ந்திருக்கும் பரப்பினைச் சுட்டுகிறது.இப்படிப்பட்ட சார்தலுடன் ஒரு படகினைப் போல என் சொற்களைப் பின் தொடர்கிறேன்.மாபெரும் பேரிரைச்சல் நிரம்பிய ஸ்தலத்தில், கொட்டிக்கிடக்கும் அடர் பச்சைப் பிரியத்தினுள் என்னை நானே மீட்டெடுக்கவும் , மூழ்கிப்போகவும் இயலுகிறது..அப்படி வாய்த்த கணங்களை அதே பிரியத்தின் குப்பியிலிட்டுப் பதிவு செய்திருக்கிறேன்.
ஸ்நேகம் எப்படியொரு பரவசத்தைத் தெளிக்குமோ,அப்படியே பிரிவையும் எதிர் கொள்கிறேன்.பிரிவை எழுதும் மனோ நிலையினை அதன் சீவாதாரமான மீள் சென்மத்தை அதன் வேர்களில் பத்திரப்படுத்துகிறேன்..
பல்வேறு சூழல்களில் என் எழுத்தை உற்சாகப்படுத்தி வரும் சமயவேல் சார்,ந.சயபாஸ்கரன் சார்,செந்தி, நேச மித்ரன், ஆகியோருக்கும்,,இத்தொகுப்பைச் சிறப்புடன் வெளியிடும் அகநாழிகை பதிப்பகத்திற்கும் என் நன்றியை உரித்தாக்குகிறேன்

Subscribe to:
Posts (Atom)